Thursday, July 10, 2025
Homeஇலங்கைஅட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த மாணவனின் சடலம் மீட்பு

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த மாணவனின் சடலம் மீட்பு

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நண்பர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை சிங்கமலை நீர்த்தேக்கத்தில் புகைப்படம் பிடிக்க சென்ற போதே தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்த பாண்டியன் தமிழ்மாறன் என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடுதல் பணியினை மேற்கொண்டனர்.

இதேவேளை, இராணுவம் மற்றும் இரங்கன கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் இன்று புதன்கிழமை (09) தேடிய நிலையில் பிற்பகல் சடலம் 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.உயிரிழந்த மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் அட்டன் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தக்கியிருந்து கல்விகற்று வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  யாழில் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக சீரழியும் மாணவர்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!