Site icon Taminews|Lankanews|Breackingnews

அதிக விலையில் குடிநீர் விற்றவர்களிடமிருந்து ரூ.25 மில்லியன் அபராதம் வசூல்

அதிக விலையில் குடிநீர் விற்றவர்களிடமிருந்து ரூ.25 மில்லியன் அபராதம் வசூல்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இதுவரை 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையான 6 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.குறித்த காலப்பகுதியில் நாடு முழுவதும் 306 சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன்படி, எதிர்காலத்திலும் இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Exit mobile version