Site icon Taminews|Lankanews|Breackingnews

அமெரிக்காவில் மீண்டும் செயற்படத் தொடங்கியது டிக்டொக்

அமெரிக்காவில் மீண்டும் செயற்படத் தொடங்கியது டிக்டொக்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசியப் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்யும் சட்டத்தை இயற்றினார்.அவ்வாறு விற்பனை செய்யத் தவறினால், டிக்டொக் செயலியை ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிடப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குக் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில், நேற்று (19) முதல் குறித்த செயலிக்கான தடை

அமுலுக்கு வந்தது.

இதனையடுத்து, டிக்டொக் நிறுவனம் தற்காலிகமாக அதன் சேவையை நிறுத்துவதாக அறிவித்தது. இதன்படி ஆப்பிள் ஐஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டொக் செயலி நீக்கப்பட்டது.இந்தநிலையில், அமெரிக்காவில் டிக்டொக் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.இன்று அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், டிக்டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக உறுதியளித்ததையடுத்து, சேவையை மீண்டும் தொடங்குவதாக டிக்டொக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version