Home » அருகிவரும் சகிப்புத் தன்மையை வலுப்படுத்த விளையாட்டுத்துறை ஊக்குவிக்கப்படுவது அவசியம் – யாழ். அரச அதிபர் பிரதீபன்

அருகிவரும் சகிப்புத் தன்மையை வலுப்படுத்த விளையாட்டுத்துறை ஊக்குவிக்கப்படுவது அவசியம் – யாழ். அரச அதிபர் பிரதீபன்

by newsteam
0 comments
அருகிவரும் சகிப்புத் தன்மையை வலுப்படுத்த விளையாட்டுத்துறை ஊக்குவிக்கப்படுவது அவசியம் - யாழ். அரச அதிபர் பிரதீபன்

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய வலைப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (21) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த தேசிய மட்ட வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.குறித்த போட்டியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட போட்டியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் 21.01.2025) இடம்பெற்றது.

இதன்போது தேசிய ரீதியில் 2 ஆம் இடத்தினை பெற்ற 40 வயதிற்குட்பட்ட பெண்கள் அணி, 2 ஆம் இடத்தினை பெற்ற 40 வயதிற்கு மேற்பட்பட்ட பெண்கள் அணி மற்றும் ஆண்கள் அணிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பயிற்றுவிப்பாளர்களுக்கும் யாழ் மாவட்ட செயலகத்தினால் சிறப்புக் கௌரவிப்பும் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மாவட்ட செயலக விளையாட்டுதுறை உத்தியோகத்தர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அதிதியாக பங்குகொண்டு உரையாற்றிய மாவட்ட செயலர் ம.பிரதீபன்,

அருகிவரும் சகிப்புத் தன்மைதை வலுப்படுத்த விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பது அவசியம் என யாழ். வலியுறுத்தினார்.மேலும் விளையாட்டுத்துறை ஒருவருக்கு சிறந்த தலைமைத்துவத்தை கொடுக்கும் ஆற்றல் மிக்கது. குறிப்பாக விளையாட்டுக்களே மனிதனை பூரணமாக்குகின்றது என்பர்கள். ஆனால் இன்று அது கேள்விக்குறியாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்அத்துடன் ஒருவர் மற்றவருக்கு ஊக்கம் கொடுக்கும் நிலையிலிருந்து பொறாமை மிக்க சமூகமாக இன்று எமது சமூகம் மாறிவருகின்றது.

இதற்கான பல காரணங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருளாதார ஈட்டலுக்கான அவசியம் வலுப்பெற்று வருவதால் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது. அதுமட்டுமல்லாது தகுதிக்கேற்ற சந்தர்ப்பங்கள் கிடையாமையும் விளையாட்டுத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான பல ஏதுநிலைகளால் விளையாட்டு துறையில் கூட சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுப்பும் இல்லாது போய்விட்டது. இந்நிலையால் இன்று சமூகத்திலும் பாரிய தாக்கத்தை காண முடிகின்றது.எனவே ஒவ்வொரு மனிதனையும் ஆழுமையானவனாகவும் தலைவனாகவும் உருவாக்கவல்ல விளையாட்டு துறையில் எமது மாவட அரச துறையினரது வெற்றியும் பங்களிப்பை வழங்கியிருக்கின்றது மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அருகிவரும் சகிப்புத் தன்மையை வலுப்படுத்த விளையாட்டுத்துறை ஊக்குவிக்கப்படுவது அவசியம் - யாழ். அரச அதிபர் பிரதீபன்

My Image Description

You may also like

Leave a Comment

error: Content is protected !!