Home » அர்ச்சனாவுக்கு கட்டாய மனநிலை சிகிச்சை வழங்கப்பட வேண்டும் – கிஷோர் தெரிவிப்பு

அர்ச்சனாவுக்கு கட்டாய மனநிலை சிகிச்சை வழங்கப்பட வேண்டும் – கிஷோர் தெரிவிப்பு

by newsteam
0 comments
அர்ச்சனாவுக்கு கட்டாய மனநிலை சிகிச்சை வழங்கப்பட வேண்டும் - கிஷோர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு கட்டாய மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என சாவாச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சாவகச்சேரி ஆதர வைத்தியசாலை குறித்து சர்ச்சை ஏற்பட்டவளை அர்ச்சனாவுக்கு ஆதரவாக முன்னின்று செயல்பட்ட முக்கியஸ்தருமான கிஷோர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அதியுயர் சபையான பாராளுமன்றில் உறுப்பினராக காணப்படும் இராமநாதன் அர்ச்சுனா, அந்த சபைக்குரிய மரியாதையை கெடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வைத்து பொதுமகன் ஒருவரை தாக்கியுள்ளார்.அவர் உண்மையில் ஒரு மனிதப்பிறவியாக இல்லை. இதனை உணர்ந்துதான் நாங்கள் சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினை தொடர்பாக அவருக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் பிணையாக செயற்பட்டதில் இருந்து விலகினோம். இலங்கை அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு கேவலமான ஒருவரை யாரும் பார்த்திருக்க முடியாது.தான் உண்மையிலேயே ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் எனவும், தனக்கான சிகிச்சையை வழங்கவேண்டும் எனவும் கூறி அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

இலங்கையின் பாராளுமன்றத்தின் பெருமையை பேணவேண்டும் என்றால் சபாநாயகர் அவர்கள் அர்ச்சுனாவை கட்டாய மனநல வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.அர்ச்சுனாவுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர் மக்களே நீங்கள் சிந்தித்து செயற்படுங்கள். அவர் செயற்படும் விதம் சரியா? அவர் ஒரு மனிதத்துவத்துடன் செயற்படுகின்றாரா என்பதை என்பதை சிந்தியுங்கள்.தெருச்சண்டையில் ஈடுபடும் இவர் தனக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என கூறுகின்றார். தனக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி ஒரு துப்பாக்கியை பெற்று அதனை வைத்து மக்களை மிரட்டுவதற்காக தான் அவர் இவ்வாறு செயற்படுகின்றார்.

கடந்தகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதி சட்டரீதியான கைத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. ஆனால் இப்படியான மனநோயாளிகளுக்கு அரசாங்கம் அந்த துப்பாக்கிகளை வழங்குமாக இருந்தால், அல்லது பாதுகாப்புக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை நியமித்தால் அவரது துப்பாக்கியை பறித்துக்கூட இவ்வாறான சந்தர்ப்பங்களில் துப்பாக்கி சூடு நடாத்துவார். இதனால் பல உயிர் ஆபத்துக்கள் கூட ஏற்படும். எனவே அரசாங்கம் இந்த விடயங்களில் கரிசினை கொள்ள வேண்டும் என்றார்.

My Image Description

You may also like

Leave a Comment

error: Content is protected !!