Site icon Taminews|Lankanews|Breackingnews

அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்

அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்

அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நேற்று நண்பகல் ஒரு விருந்தகத்திலிருந்து மற்றொரு விருந்தகத்தின் நுழைவாயில் வரை அவர் மேலாடையின்றி நடந்து சென்றுள்ளார்.குறித்த பெண் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவருடன், கடந்த 11 ஆம் திகதி நாட்டிற்கு வந்த குறித்த பெண் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் உள்ள விருந்தகத்தில் தங்கியிருக்க முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட பெண் இன்று பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொத்துவில் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version