சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடி சிரித்துப் பேசி கலந்துரையாடினார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், சீனாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியது.இந்த நிலையில், இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில், சீனாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசிய புகைப்படத்தை பதிவிட்டு, “இந்தியாவையும், ரஷியாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் நீடித்த ஒற்றுமையுடன், வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.