Wednesday, January 22, 2025
Homeஇந்தியாஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

92 வயதான அவர், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டிருந்தார். மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்று பார்வையிட்டனர்.இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.33 ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் மாநிலங்களவையில் மன்மோகன் சிங் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் அவருடைய மறைவுக்கு, இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் காதல் ஜோடி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!