Home » ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

by newsteam
0 comments
ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாகர்கோவில் அருகே, ஜான் ஸ்டீபன் என்கிற ஜோதிடர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நம்பி ராஜன் என்கிற வாலிபர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கலையரசி என்கிற பெண், பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக, ஜோதிடர் ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாததால், தான் கட்டணமாக கொடுத்த 9 லட்சம் ரூபாய் பணத்தை ஜான் ஸ்டீபனிடம் திரும்ப கேட்டிருக்கிறார்.ஆனால் அவர் பணத்தை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கலையரசி, முகநூல் நண்பரான நம்பி ராஜனுடன் சேர்ந்து ஜான் ஸ்டீபனை கொலை செய்திருக்கிறார். இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode