இந்தியாவின் ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பாடசாலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார்.இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.
மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி பொலிஸில் புகார் செய்தனர். பொலிஸார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமியை மீட்ட பொலிஸார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.இதன்பின், மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர்.அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.இதுகுறித்து பொலிஸில் புகார் செய்தனர். பொலிஸார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.