Wednesday, January 22, 2025
Homeஇந்தியாமொபைல் கேம் விளையாடிய மூன்று இளைஞர்கள் பலி

மொபைல் கேம் விளையாடிய மூன்று இளைஞர்கள் பலி

இந்தியாவின் பீகாரில் மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீக காலத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. பாடசாலை மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை அனைவரும் செல்போனுக்குள் மூழ்கி விட்டனர். நேரத்தை போக்க செல்போன் பயன்படுத்தும் காலம் மாறி பலரும் செல்போன் பயன்படுத்துவதையே வேலையாக மாற்றிவிட்டனர். இளைஞர்கள் பலரும் சமூக வலைதளம், கேம்ஸ்களுக்கு அடிமையாகி விட்டனர் என்றே கூறலாம். இந்த நிலையில், மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 3 இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் இளைஞர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் பற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர்கள் காதில் ஹெட்போன் அணிந்திருந்ததால் ரயில் அருகே வருவதை கவனிக்க தவறியதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்கள் புர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மொபைல் கேம் விளையாடுபவர்கள் மற்றும் மொபைல் பயன்படுத்துபவர்கள் இதுபோன்ற ஆபத்தான இடங்களில் அமராமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து பயன்படுத்துமாறு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மொபைல் போன்களை அளவுக்கு மீறி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் பலரும் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:  மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!