Sunday, August 3, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 03-08-2025

இன்றைய ராசி பலன் – 03-08-2025

இன்றைய ராசிபலன் 3.08.2025, விசுவாசுவ வருடம் ஆடி மாதம் 18 ஞாயிற்று கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள சேர்ந்த ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசிக்கு இன்று சராசரியான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் சில சிரமங்கள் ஏற்படும். அதில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்கள் இலக்கு அடைய பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரம் தொடர்பாக முதலீடு செய்யும் முன் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.இன்று உங்கள் பணம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சி செய்யவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து சென்றால் சிறப்பான பலன் கிடைக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசிக்கு இன்று வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்பு தேவைப்படும். பணியிடத்தில் உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் உறவை மேம்படுத்த முடியும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. உங்களின் மன சங்கடங்களை நண்பர்களின் ஆலோசனையாய் தீரும். ஆரோக்கியம் தொடர்பாக இந்த பிரச்சனையும் இருக்காது அதனால் தைரியத்துடன் எந்த வேலையும் செய்து முடிப்பீர்கள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நிலைமை மேம்படக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப தேவைகளுக்காக அதிகம் செலவிடுவீர்கள். குறிப்பாக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். இன்று உங்களின் நிதி நிலை பராமரிப்பது கவனம் செலுத்தவும். உங்கள் காதல் துணைவினை நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடித்தால் எதிர்பார்த்த எல்லாவற்றையும் பெறலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசிக்கு இன்று மகிழ்ச்சியான நாளாகவும் இருக்கும். உங்கள் வேலை தொடர்பாக முன்னேற்றக் கூடிய எதிர்பார்க்கலாம். குடும்பத்திலும் பணியிடத்திலும் மரியாதை கிடைக்கும். நண்பர்களின் அன்பை பெறுவீர்கள். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.இன்று அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். வேலை தொடர்பாக சில செல்ல வாய்ப்பு உண்டு. அதில் உற்சாகம் நிறைந்திருக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசிக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். உடல்நலம் மீது கவனித்துக் கொள்வது நல்லது. அன்புக்குரியவர்களிடமிருந்து பரிசு கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று வேலையில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். பாராட்டு கிடைக்கும். சில நல்ல செய்திகள் தேடி வரும். இன்று உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லை எனில் பணம் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்கு மிகவும் நல்ல நாளாக அமையும்.. அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க முடியும். நிதிநிலை முன்னேற்றம் அடைவதற்கான நாள் .உங்கள் உறவில் இணக்கத்தை கடைப்பிடிக்கவும். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லை எனில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பொழுதுபோக்குக்காகப் பணத்தை அதிகமாக செலவிட வாய்ப்பு உண்டு. திருமணம் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும். உங்களுக்கு புதிய வாழ்க்கைத் துணை கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன் - 28-07-2025

துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பது நல்லது. பணியிடத்தில் கடினமான சூழல் இருக்கும். வியாபாரம் தொடர்பாக சில வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். காதல் தொடர்பான விஷயத்தில் துணையுடன் விருந்துக்கு செல்ல முயற்சி செய்வீர்கள்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்கு சாதகமான நாளாக இருக்கும். வேலை தொடர்பாக வெற்றியை பெறுவீர்கள். உங்கள் திறனை மேம்படுத்தவும், முன்னேற்றத்திற்காகவும் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். செலவுகள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களை இலக்குகளை அடைய அதிக முயற்சி தேவைப்படும். ஆரோக்கியம் தொடர்பாக கவனமாக இருக்கவும். உங்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடவும். உறவுகளை மேம்படுத்தவும்.

தனுசு ராசிபலன்
தனுசு ராசிபலன்
தனுசு ராசிக்கு இன்று வேலையில் பிரச்சனைகள் நேரிடும். அதை தீர்ப்பதில் பொறுமையாக வா சூழலை கையாள்வது நல்லது. பணியிடத்தில் மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களின் கடின உழைப்பிற்கான பாராட்டு கிடைக்கும். சிலருக்கு வெகுமதிகளும் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுக்கு அழகான தொடக்கமாக அமையும். வணிகம் தொடர்பாக இருக்கக்கூடிய புதிய திட்டங்கள் உங்கள் வேலையை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவும். அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

மகர ராசி பலன்

மகர ராசிக்கு இன்று சராசரியான நாளாக இருக்கும். சில விஷயங்களில் கவலை ஏற்பட்டாலும், சில வெற்றி தரக்கூடிய செய்திகள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். எதிரிகள் விஷயத்தில் விலகி இருப்பது நல்லது. இன்று எல்லா விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். குடும்பத் தகராறுகளை தவிர்க்க வேண்டிய நாள். பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் செலவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் வேலைகளில் வெற்றியை பெறலாம். பொறுமையுடன் சூழ்நிலை கையாளவும். இலக்கை அடைய முயற்சி செய்வது வெற்றியைத் தரும். உங்களின் ஆளுமை திறன் சிறப்பாக இருக்கும் என்பதால் குழுவாக செய்யக்கூடிய பணிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்ப உறவுகள் மேம்படும். இன்று குடும்பத்தினருடன் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து அன்பை பெறுவீர்கள்.

மீனம் ராசிபலன்

மீன ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும்.. அன்றாட பணிகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். இன்று மனதில் உற்சாகம் பிறக்கும்.உறவினர்களிடமிருந்து ஆதரவையும் பரிசுகளையும் பெறுவீர்கள். வேலை தொடர்பாக மும்முரமாகச் செயல்படுவீர்கள். இன்று செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகளை அதிக உற்சாகத்துடன் இருக்க வேண்டாம். நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று பட்ஜெட் போட்டு செயல்பட வேண்டிய நாள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!