இன்றைய ராசிபலன் 8.07.2025, விசுவாசுவ வருடம் ஆனி மாதம் 24, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மற்றும் சுக்கிரன் இடையே சமசப்தக யோகம் உருவாகிறது. சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள சுவாதி, விசாகம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம்ராசி பலன்
வியாபாரிகளுக்கு இன்று கொஞ்சம் பலவீனமான நாளாக இருக்கும். பழைய செயல்பாடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் இந்த பண லாபம் அன்றாட செலவுகளை சமாளிக்க இது உதவும். எல்லா துறைகளிலும் திறமையாக செயல்படுவீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ப வேலையில் பலன் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பீர்கள். இது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். எந்த வேலையையும் கூட்டு முயற்சியில் செய்வது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். முக்கியமான பணிகளை பட்டியலிட்டு செய்வது நல்லது. உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். எதிர்காலத்தில் இது பெரிய நோயாக மாறலாம். எந்த ஒப்பந்தத்திலும் கவனமாக கையெழுத்திடவும். வேலையில் எந்த அழுத்தமும் வேண்டாம். ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவது தீங்கு விளைவிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம் ராசி பலன்
இன்று முக்கியமான நாளாக இருக்கும். நிலம் தொடர்பான கட்டுமான விஷயங்களில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் உங்கள் திட்டங்களை கவனமாக செயல்படுத்தவும். சுப நிகழ்வு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைவரையும் மரியாதையாக நடத்தவும். இல்லையென்றால் உங்கள் மீதான மதிப்பு குறையும். இன்று இலக்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே உங்கள் வேலை முடியும். இன்று உங்கள் தலைமைப் பண்பு வலுவாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
இன்று கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். அரசு வேலையில் இருப்பவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று எந்த வித வாக்குவாத்திலும் ஈடுபட வேண்டாம். இல்லையென்றால் கூடுதல் பிரச்னை ஏற்படலாம். வியாபார முடிவுகளை கவனமாக எடுக்கவும். நிதி விஷயங்களில் வெளியில் இருந்து ஆலோசனை கேட்க வேண்டாம். மாணவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இன்று நீங்கள் சில புதிய நபர்களை சந்திக்கலாம். இது பயனுள்ளதாக இருக்கும்.
சிம்மம் ராசி பலன்
இன்று உங்களுக்கு இனிமையான பலன்களைத் தரும். புதிய திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பணியிடத்தில் யாரையும் குருட்டுத்தனமாக நம்புவதை தவிர்க்கவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலை இன்று முடியும். ஆன்மிக பயணம், வேலை தொடர்பாக அனைவரையும் ஒன்றிணைத்து செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் தாய் வழி உறவினர்களை சந்திக்கவும், அவர்களின் ஆதவும் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
இன்று உங்கள் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். அனைவரின் நலனையும் மனதில் கொள்வீர்கள். சில முக்கியமான பணிகளை விரைவாக முடிக்க திட்டமிடவும். குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொல்ல வேண்டாம். அதை பிறர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தைக்கு கொடுத்துள்ள பொறுப்புகள் சரியாக நிறைவேறும். மாணவர்கள் இன்று கல்வியில் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள்.
துலாம் ராசி பலன்
இன்று உங்கள் தைரியம் அதிகரிக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பெரிய பதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். விவாதங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அரசு திட்டங்களில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். உங்கள் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும். மற்றவர்களின் வேலைக்கு அதிக கவனம் செலுத்துவீர்கள். இதனால் நஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் விரும்பிய லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
இன்று கலவையான பலன்களைத் தரும். குடும்ப உறுப்பினரின் திருமணம் தொடர்பான நல்ல தகவலால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் வருகை இருக்கும். மதிப்புமிக்க பொருள் பரிசாக கிடைக்கும். உங்கள் மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சில வெளி நபர்களுடன் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதில் வெற்றியும், லாபமும் பெறுவீர்கள். எந்த வேலையையும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அது முடியும். குழந்தையின் உடல்நிலை குறித்து கவலைப்படுவீர்கள்.
தனுசு ராசி பலன்
இன்று நீங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் சகாக்கள் உங்கள் திறமை, அழகைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். மூத்த உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். நீங்க வாக்கு கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவீர்கள். இன்று சில தனித்துவமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனால் பேச்சு மற்றும் நடத்தையில் இனிமையை கடைபிடிக்கவும். இன்று கலைத் திறன்கள் மேம்படும். வியாபாரம் செய்பவர்கள் பழைய திட்டங்களிலிருந்து நல்ல லாபம் பெறலாம்.
மகரம் ராசி பலன்
இன்று முக்கியமான நாளாக இருக்கும். தொண்டு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையென்றால் நிதி பிரச்சினைகள் வரலாம். கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு செயல்படவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபார விஷயமாக நீண்ட தூரம் பயணம் செல்லலாம். குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களிடம் மன வருத்தம் ஏற்படும். லாபத்திற்காக அவர்களை உங்கள் விருப்பத்திற்கு வற்புறுத்த வேண்டாம்.
கும்பம் ராசி பலன்
இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் புதிய மூலங்களிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சில முக்கியமான விஷயங்கள் உங்களுக்கு பிரச்னையாக அமைய வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை சரியான நேரத்தில் முடிக்க முயலவும். அரசு அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம்.
மீனம் ராசி பலன்
இன்று உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே சமநிலையை பராமரிப்பது நல்லது. பண செலவு உங்கள் மனதை கவலையில் ஆழ்த்தும்.பணியிடத்தில் சில தடைகள் எதிர்கொள்வீர்கள். ஆனால் உங்கள் மேலதிகாரிகளின் உதவியுடன் சமாளிக்க முடியும். இன்று ஒரு புதிய நண்பர் கிடைப்பார். உங்கள் நேர்மறை எண்ணங்களை நன்றாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களிடமிருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பிரச்னைகள் வரலாம். முன்பு நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்த பணம் திரும்ப கிடைக்கும்.