Friday, September 12, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் 12-09-2025

இன்றைய ராசி பலன் 12-09-2025

இன்று செப்டம்பர் 12, குரு – புதன் – சனி அமைப்பால் துவிதாஸ் யோகம் உருவாகிறது. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று சித்த யோகம் கூடிய நாளில், கன்னி ராசிக்கு e
இன்று செப்டம்பர் 12, வெள்ளிக் கிழமை கிரகங்களின் அமைப்பால் உருவாகும் ஷசி யோகம், துவிதாஸ் யோகம் பல ராசிகளுக்கு நல்ல பலன் ஏற்படுத்தும். இன்று சந்திரன் மேஷ ராசியில் அமர்கிறார். இன்று கன்னி ராசியின் அஸ்தம், சித்திரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் ஏற்படுகிறது.

மேஷ ராசி பலன்

மேஷராசி சேர்ந்தவர்களுக்கு இன்று வீட்டைப் பராமரிப்பதது தொடர்பாக சிறிது பணம் செலவிட நேரிடும். இன்று ஆன்மிகம், சமூகப் பணிகளில் சிலருடன் சேர்ந்து செயல்படுவீர்கள். இது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் வேலைத் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும் சூழல் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து தொடர்பாக இருந்து வந்த சிக்கல்களை தீர்க்க முடியும். உங்கள் தொழிலில் நேர்மறையான மாற்றங்கலைக் காணலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். இன்று குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள் . காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்க வாய்ப்பு உண்டு. அது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். இன்று மாலை, கடினமான நிலையிலிருந்து சிறிது முன்னேற்றம் ஏற்படும். உங்கள் அண்டை வீட்டாருக்கு உதவ முன்வருவீர்கள். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். உங்கள் உடல் நலத்தை மேம்படுத்திக் கொள்ளும் விஷயங்களில் ஈடுபடவும். எடுத்த வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், இதனால் சற்று மன அழுத்தம் ஏற்படும் . இன்று எந்த ஒரு வேலையையும் அவசரமாகச் செய்ய வேண்டாம். இதனால் இழப்பு அல்லது தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்று, உங்கள் வாகனத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக, செலவுகள் திடீரென்று அதிகரிக்கலாம். குடும்பத்தில் குழந்தைகளுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள், இது உங்கள் நிலுவையில் உள்ள வேலை முடிக்க உதவும். இன்று உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று வெளிநாடு தொடர்பான தொழில், வேலைகளில் வெற்றி பெறுவதைக் காணலாம்.

கடக ராசி பலன்

கடகம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் புதிய வேலையைத் தேடத் தொடங்குவீர்கள் . குடும்ப சொத்து தொடர்பான ஏதேனும் தகராறு இருந்தால், அது குடும்பத்தின் மூத்த நபர்களின் உதவியால் தீர்க்க முடியும். இன்று மாணவர்கள் உயர்கல்வி விஷயங்களில் வெற்றி சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பணியிடத்தில் உங்கள் சக ஊழையர்களின் ஆலோசனையால் நீங்கள் நிறைய பயனடைவீர்கள், இது இருவரின் உறவையும் வலுப்படுத்தும். இன்று மாலை நேரம் தர்ம வேலைகளில் ஈடுபடுவீர்கள். மேலும் சில நல்ல செய்திகளின் வருகையால், பொருள் வசதிகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்மம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நீங்கள் பணியிடத்தில் எந்த விதமான வாக்குவாதத்தையும் தவிர்க்க வேண்டும் , இல்லையெனில் இந்த விவாதம் ஒரு சட்டப் பிரச்சினையாக கூட மாறக்கூடும். உங்கள் வேலை தொடர்பாக நிலையற்ற தன்மை காரணமாக சில சிக்கல்கள் எழலாம், இதன் காரணமாக மனம் அமைதியற்றதாக இருக்கும். பொறுமையுடனும் பெரியவர்களின் உதவியுடனும் உங்கள் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நிலுவையில் உள்ள உங்கள் அரசு தொடர்பான வேலைகளும் இன்று முடிவடையும். தொழிலதிபர்கள் இன்று பண நெருக்கடியை சந்திக்க நேரிடும். மாலையில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் வெற்றியை அடைய படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் , ஆனால் நீங்கள் எந்த வகையான ஆபத்துகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். கல்வி தொடர்பாக மாணவர்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்கள் இன்று முடிவுக்கு வரும். இன்று மக்கள் உங்கள் வேலையில் செயல்பாடுகளைக் கண்டு ஈர்க்கப்படுவார்கள். இன்று உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த சில புதிய சோதனைகளை முயற்சிப்பீர்கள்.குடும்ப சூழல் இனிமையாக இருக்கும், மேலும் உங்கள் செல்வாக்கு பணியிடத்தில் அதிகரிக்கும். இன்று சில தேவையற்ற செலவுகளும் வரும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை ஆட்டம் காணக்கூடும். காதல் வாழ்க்கையில் ஒரு புதிய ஆற்றல் வரும், இன்று உங்கள் தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மாலை நேரத்தை உங்கள் நண்பர்களுடன் சில சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.

இதையும் படியுங்கள்:  இன்றைய ராசி பலன்- 21-08-2025

துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் மரியாதை கிடைக்கும். சிலரிடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். உங்கள் பணியிடத்தில் சில சௌகரியங்கள் கிடைக்கும். உரிமை அதிகரிக்கும். இன்று உங்கள் பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க முயற்சி செய்யவும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்களின் தைரியம் மற்றும் செயல்பாடு பாராட்டு பெற்றுத் தரும். இன்று சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் கடின உழைப்பு தேவைப்படும். இதனால் உடல் சோர்வு ஏற்படும் அல்லது உடல்நல பாதிப்பு ஏற்படும். இன்று பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் குழந்தைகளின் வேலை தொடர்பாக சில நல்ல செய்திகள் பெறுவீர்கள். பரபரப்பான நாளாக இருக்கும். இருப்பினும் உங்கள் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கவும். இன்று புதிய தொழிலில் தொடங்குவதில் சில சிரமங்கள், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களின் நிதி நிலையை கவனமாக பராமரிக்கவும். போட்டி தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தொழில் தொடர்பாக நிலவில் வரும் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தந்தையின் ஆதரவு காரணமாக தொழிலில் நிலவும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவீர்கள். இன்று மாலை ஒரு சுப விழாவில் கலந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் குடும்பத்தில் சில விஷயங்களுக்காக கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். இல்லையெனில் உறவில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மாணவர்கள் படிப்பில் வெற்றி அடைய கடின உழைப்பு தேவை. இன்றும் உங்கள் உடல் நலனை பராமரிப்பதோடு, உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். இன்று உங்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். உங்கள் துணைக்காக பரிசு வழங்க நினைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று சிறிது மன அழுத்தம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும். காதல் வாழ்க்கையில் உறவுகள் மேம்படும். இன்று குடும்பத்தில் சில விஷயங்களை குறித்து விவாதிப்பீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் பொதுமக்களின் ஆதரவு கிடைக்கும். இன்று எதிர்காலம் தொடர்பாக நிதி நிலை மேம்படுத்தும் விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பேச்சில் இனிமையும், செயலில் நிதானத்தையும் கடைபிடிக்கவும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு இன்று எதிர்காலத்திற்கான தேவையைக் கருதி பணத்தை சேமிக்க திட்டமிடுகிறார்கள். உங்கள் தந்தையுடன் உறவு மேம்படும். பெற்றோரின் ஆலோசனைக்கு முன்னுரிமை அளிப்பீர்கள். உங்களின் பணியிடத்தில் அனைவரிடமும் அனுசரித்து செல்லவும். இன்று பொழுது போக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். கும்பம் இன்று நீண்ட காலமாக சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். குடும்பத்தில் பெரியவர்களை மதித்து நடக்க வேண்டிய நாள்.

மீன ராசி பலன்

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று தங்களின் குழந்தைகள் மற்றும் மனைவி மீதான அன்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் குடும்பத்தின் பெருமையை அதிகரிப்பீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். திருமணம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். உங்கள் வேலை தொடர்பாக சில நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். இந்த மூத்த சகோதரர்களிடம் இருந்து ஆதரவை பெறுவீர்கள். உங்களின் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இன்று பெரிய பண பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். குடும்பத்தினரில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!