Thursday, August 14, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 13-08-2025

இன்றைய ராசி பலன் – 13-08-2025

இன்றைய தின பலன் ஆகஸ்ட் 13, புதன் கிழமை குரு – சந்திரனின் அமைப்பால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் நன்மைகள் அதிகரிக்கும். சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் மகம், பூரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசிக்கு இன்று மிகவும் சவாலான நாளாக இருக்கும். நாள் முழுவதும் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.உங்கள் வேலையில் சவாலுக்கு பின்னர் வெற்றி கிடைக்கும். இன்றும் உங்களின் எண்ணங்களை தெளிவாக வைத்திருக்கவும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். இன்று உங்கள் சுற்றியுள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக உங்களின் சிந்தனையை நேர்மையாக வைத்து செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அமைதியை காக்க முயற்சி செய்யவும். இன்றைய பண வரவு நன்றாக இருக்கும்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள். உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இன்று உறவினர்களிடம் இருந்து பரிசுகள் கிடைக்கும். குடும்ப சூழல் அன்பு நிறைந்திருக்கும். உங்கள் வேலையை சரியாக செய்து பாராட்டு வாங்குவீறீர்கள். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். மாணவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பாக மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்பாடுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். வணிகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். சேமிக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் விதமாக சில விஷயங்கள் நடக்கும்.

கடக ராசி பலன்

கடக ராசிக்கு ஒரு அளவு நன்மை கிடைக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். அனைத்து விஷயங்களுக்கும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். அமைதியான வழியில் உங்கள் முன்னேற்றத்திற்கு முயலவும். குடும்பத்தில் எழும் சர்ச்சைகளைச் சமாளிக்க வேண்டிய சூழல் இருக்கும். படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். இன்று குடும்பத்தில் அமைதியை பேண முயற்சிக்கவும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் அதிக கவனத்துடன் செயல்படவும். வேலை, தொழில் தொடர்பாக ஒப்பந்தங்கள் கிடைக்க அலைச்சல் ஏற்படும். இன்று தொழில் தொடங்க சில சிக்கலை சமாளிக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் படிப்பில் கடின உழைப்பு தேவை. தொடர் முயற்சி மூலம் எதிர்பார்த்த வெற்றியை தருவீர்கள். இன்று உங்கள் வேலையை சரியாக செய்து முடிக்கவும். உங்களின் தவறுகளை மேலதிகாரிகள் சுட்டிக்காட்ட வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். வேலை தொடர்பாக எதிர்பார்த்து வெற்றி பெறலாம். பணியிடத்தில் செயல்பாடுகளால் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு இருக்கும். இன்று உறவினர்களிடம் பேச, அவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதல் விஷயத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இன்று உங்களின் உடல் நலம் தொடர்பாக பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது. எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியும். புகைப்படங்களுடன் செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு தேடி வரும். இன்று வருமானம் அதிகரிக்க கூடிய நாள்.

இதையும் படியுங்கள்:  யாழ் மாவட்டத்தின் காற்றின் தரத்தை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு

துலாம் ராசி பலன்

துலாம் ராசிக்கு சிறந்த நாளாக அமையும். உங்கள் வாழ்க்கையில் இனிமையான அனுபவங்களை பெறுவீர்கள். பணியிடத்தில் பெரிய வெற்றியை பெறலாம். புதிய திட்டங்கள், யோசனைகள் மனதில் தோன்றும். இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும் என்பதால் உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பங்குச்சந்தையை தொடர்பான லாபத்தை பெறுவீர்கள். இன்று உங்கள் தொழில் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி பலன்

உங்களுக்கு கடினமான நாளாக இருக்கலாம். வேலையை கவனமாக செய்து முடிக்கவும். உங்களின் உடல் நலனை கவனித்துக் கொள்ளவும். உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். நீங்கள் எடுத்த வேலையை முடிக்க மும்முரமாகச் செயல்படுவீர்கள். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். முக்கிய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு வேலையில் பெரிய வெற்றிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எதிர்பார்த்த சில நிதி நன்மைகள் பெறுவீர்கள். உங்கள் துணை மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேற்று மொழி நபர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். இன்று பொழுதுபோக்கு விஷயங்களுக்காக அதிகமாக செலவிட வாய்ப்பு உண்டு. புதிய வாகனம், சுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.

மகர ராசி பலன்

மகர ராசிக்கு கடினமான நாளாக இருக்கும்.உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும். முன்னர் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செய்துவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று பிறரை புரிந்து கொள்வதற்கான நல்ல சூழல் இருக்கும். புதிய திட்டங்களை எடுத்து செயல்பட வாய்ப்பு உண்டு.இன்று உங்கள் வேலையில் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் இருக்கும். பங்குச் சந்தை தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மன உறுதி அதிகரிக்க கூடிய நாள். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும். அதே சமயம் பிறருக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களில் சிறிது நேரத்தை செலவிடுவார்கள்.

மீன ராசி பலன்

கொஞ்சம் கடினமான நாளாக இருக்கும். பல சிக்கல்களை சந்தித்தாலும் உங்களின் மன தைரியத்தால் அதிலிருந்து விடுபட முடியும். உங்கள் உறவினர்களிடமிருந்து சில நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் தொடர்பாக உங்கள் துணையை சந்திக்க வாய்ப்பு உண்டு.. வேலையில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டை பெற்றுத் தரும். இன்று எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். இன்று செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!