இன்று அக்டோபர் 16ம் தேதி, வியாழக் கிழமை கடக ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம். இன்று சூரியன் கன்னி ராசியிலும், சந்திரனுக்கு அடுத்து வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பதால் சுனபா யோகம் உருவாகிறது. இன்று தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்
இன்று சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும். உங்கள் துணையின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அரசியல் துறையிலும் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு, இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் ஒரு சிறப்பு ஒப்பந்தம் முடிவடையும், இது அவர்களின் தொழிலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் தொழிலுக்கு மிகவும் இலாபகரமான நாளாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும், மேலும் உங்கள் சக ஊழியர்களும் உங்களை ஆதரிப்பார்கள். தகுதியான நபர்களுக்கு இன்று நல்ல திருமண வரம் அமையும். நடந்து கொண்டிருக்கும் எந்தவொரு சட்ட தகராறுகளும் தீரும். உங்கள் குடும்பத்தினருடன் புனித இடத்திற்கு யாத்திரை மேற்கொள்ளலாம். குடும்பத்தில்சில சில சுப நிகழ்வுகள் நடக்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடித்தமான வீட்டில் வேலைகளை செய்து முடிப்பார்கள், அது அவர்களின் திறமையை தெளிவாக பிரதிபலிக்கும். இன்று மாலைக்குள், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் தொழிலை மேம்படுத்த பயணம் மேற்கொள்ள நேரிடும். மாணவர்கள் தேர்வு தொடர்பாக சிறப்பாக செயல்படுவார்கள். இன்று உங்கள் அக்கம்பக்கத்தில் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.
கடகம் ராசி பலன்
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் எந்த வேலையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். இன்று நீண்ட நாட்களாக தடைபட்டு வந்து பணிகளை சரியாக முடிக்க முடியும். அலுவலக சூழ்நிலை மேம்படும். உங்கள் யோசனைகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு.இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் எந்த வேலையும் சரியான நேரத்தில் பலனைத் தரும், உங்கள் சக ஊழியர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள். இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் மாமியார் மூலம் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று ஒரு பரபரப்பான நாளாக இருக்கும், ஆனால் உங்கள் காதல் வாழ்க்கைக்கு இன்னும் நேரம் கிடைக்கும். ஆன்மீகம் சந்தை விஷயங்களில் ஆர்வம் இன்று அதிகரிக்கும். வேலையில் உங்கள் எதிரிகள், மேலதிகாரிகள் உங்கள் வேலையைத் தடுக்க முயற்சிப்பார்கள், ஆனால் நீங்கள் நினைத்த வகையில் வேலையை முடிக்க முடியும். சொத்து வாங்க விரும்பினால், இன்று அதற்கு ஒரு நல்ல நாளாக இருக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி வென்றவர்களுக்கு இன்று தங்களின் இனிமையான பேச்சாளர், வேலை மற்றும் தொழில் தொடர்பாக மரியாதை கிடைக்கும். உங்களின் வருமானம் ரிக்க அதிகரிப்பதற்கான சிறப்பான சூழல் நிலவும். குடும்பத்தில் சில விமான நிலையங்கள் நடத்துவது குறித்து விவாதிப்பீர்கள். இன்று வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கும். சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று பெற்றோருக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் இன்று தீரும். உங்கள் தொழிலில் புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள், இது எதிர்காலத்தில் உங்களுக்கு குறிப்பிடத்தக்க லாபத்தைத் தரும்.இன்று குடும்ப பிரச்சனைகளை விட்டுக்கொடுத்த செல்லவும். சிலர் நிலம் தொடர்பான பிரச்சனைகளை செய்ய வாய்ப்பு உண்டு. இன்று மாலைக்குள் உங்கள் எதிரிகள் அடங்கி விடுவார்கள். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக வகையை சேர்ந்தவர்களுக்கு இன்று தொழில் தொடங்க புதிய திட்டங்களுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று நாள் முழுவதும் லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். இன்று மிகுந்த மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் வேலை தொடரமாக நிதி ஆதாயம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இன்று தாய்வழி சொந்தங்கள் மூலம் கௌரவம் அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் ஏற்பாடு செய்ய வேண்டியது இருக்கும். இன்று உங்கள் வணிகம் தொடர்பாக பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வணிகத்தில் நீங்கள் இருக்கக்கூடிய சில ரிஸ்க்குகள் குறிப்பிடத்தக்க லாபத்தை தரும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பதும், முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செய்யவும் இல்லை எனில் சரியான நேரத்தில் முடிக்க முடியாத நிலையும், வேலை பளு அதிகரிக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று பொன்னான அமைப்புகள் தேடி வரும். உங்கள் வணிகம் தொடர்பான கூட்டணிகளின் ஆதரவால் நன்மைகள் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகள் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று ஒரே நேரத்தில் பல பணிகள் செய்வதை தவிர்க்கவும். சரியான திட்டமிடலுடன் செயல்படவும். இன்று நீண்ட நாட்களாக நிலுவில் உள்ள பணிகளை முடிக்க முடியும். இன்று மாலை நேரத்தில் அண்டை வீட்டாரிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். உங்கள் உடல் நலனில் கவனமும் உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். அவசர மனநிலை காரணமாக உங்கள் வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக தவறுகள் ஏற்படும். செய்வதற்கு முன் கவனமாக சிந்தித்து செயல்படவும். இன்று உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படும். உங்களின் காதல் வாழ்க்கையை மேம்படும் நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி சென்றவர்களுக்கு தொழில் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் வேலை தொடரும் வழங்க இருக்கக்கூடிய சங்கடங்களுக்கு தீர்வு காண முடியும். உங்கள் தொழில் மற்றும் வேலை தொடர்பாக நிதானமான செயல்படுத்த தேவை. உங்கள் உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். புதிய சொத்து வாங்குவதில் முதலீடு செய்ய நினைத்தால், இன்று சாதகமான நாளாக இருக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக உள்ள சில பிரச்சனைகளை ஆசிரியர்களின் உதவியால் தீர்க்க முடியும்