Wednesday, September 17, 2025
Homeஜோதிடம்இன்றைய ராசி பலன் - 17-09-2025

இன்றைய ராசி பலன் – 17-09-2025

இன்று செப்டம்பர் 17, புதன் கிழமை, சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். செவ்வாய் துலாம் ராசியில் மாறியுள்ளார். இன்று கடகத்தில் உள்ள புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பெயர்ச்சியாக உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினத்தில், கேட்டை, மூலம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷ ராசி பலன்

இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு. இன்று உங்கள் பேச்சை கட்டுப்படுத்தவும். நீங்கள் எந்த தொழிலை தொடங்கினாலும் அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்க கூடிய நாள். அதிகப்படியான வேலை காரணமாக உடல் சோர்வு ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப பொறுப்புகளை கவனமாக நிறைவேற்றவும். உங்களின் சகோதர, சகோதரிகளின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி பலன்

இன்று மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தை காண்பார்கள். பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும். இன்று அவர்களின் கடின உழைப்பிற்கான நல்ல பலனை எதிர்பார்க்கலாம். தொழில் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தின் மரியாதை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் காதல் சாதகமற்ற சூழல் இருக்கும். இன்று உங்களின் நிதிநிலை மேம்படும். அதேசமயம் உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு இன்று திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வரன் கிடைக்கும். இது குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சியடைய செய்யும். இன்று உங்கள் தொழில் தொடர்பாக நேர்மறையான மாற்றங்களும், லாபம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின உழைப்பிற்கான நல்ல பலனை பெறுவார்கள். உங்கள் வேலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். வாழ்க்கைத் துணையின் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். பணியிடத்தில் பிறரின் உதவிகள் கிடைக்கும்.

கடக ராசி பலன்

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு வியாபாரம் தொடர்பான திட்டங்கள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். நீங்கள் எதிர்கொண்டு வரும் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு. குடும்பத்தின் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் உங்கள் பொருளாதாரத்தில் தடுமாற்றம் ஏற்படும். இன்று உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தினால் சவால்கள் நிறைந்த இன்று சமாளிக்க முடியும். உடல் நலனில் கவனம் தேவை. வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி பலன்கள்

வண்டி வாகன பயன்பாடுகளில் கவனம் தேவை. வணிகத்தில் விரும்பிய இலக்கை அடைய முடியும். உங்களுக்கு மனமகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நாள். நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் உதவியால் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க முடியும். என்றதுக்காக ஊழியர்கள் அல்லது உறவினர்களால் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இன்றைய பெரிய பண பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். உங்கள் வீட்டில் தேவைகள் அதிகரிக்கும். மாணவர்கள் மேற்படிப்புக்கான சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு எதிர்கால தேவைகள் கருதி புதிய சேமிப்பு திட்டங்களில் ஈடுபடுபவர்கள். இன்று உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நிதிநிலை முன்னேற்றம் அடையும். இன்று உங்களின் மென்மையான பேச்சு நற்பலனை அதிகரிக்கும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்ப நிலைமையும் முன்னேற்றம் அடையும். உடன் பிறந்தவர்களுடன் உறவு மேம்படும். காதல் வாழ்க்கையும் இணக்கமான சூழல் ஏற்படும். உங்கள் துணைவிக்கு பரிசு வாங்கி தர நினைப்பீர்கள். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படியுங்கள்:  போதைப்பொருள் கடத்தல்காரர் 'ஷான் சுத்தா' தப்பியோட்டம்

துலாம் ராசி பலன்

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று உங்களின் நற்பெயர் அதிகரிக்கக் கூடிய நாள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பிள்ளைகளின் திருமணம் குறித்த பிரச்சனைகள் தீரும். நல்ல வரன் அமையும். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். பணியிடத்தில் நேர்மறையான சிந்தனைகள் முன்னேற்றத்தையும், மனதில் புதிய ஆற்றலையும் தரும். இன்று மேலதிகாரிகளின் பாராட்டுகள் பெறுவீர்கள். உங்களின் திருமண வாழ்க்கை, காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு வேலை தொடர்பாக யோசித்து சிந்தனை உடன் செயல்படவும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சொல்லவும். பணியிடத்தில் பெண் நண்பர்களின் உதவிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் நிதி நிலை சுமை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். பழைய கடன் பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். இன்று பெரிய மற்றும் முக்கியமான பண பரிவர்த்தனங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு பணியிடத்தில் மறைமுக எதிரிகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இதனால் உங்கள் வேலை சிரமங்கள் ஏற்படும். இன்று உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடவும். வணிகம் சார்ந்த விஷயங்களில் அனுபவசாலிகளின் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்பத்தொழில் வெற்றி கிடைக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இன்று ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும் என்பதால் வெளி உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கவும்.

மகர ராசி பலன்

மகரம் ராசி சேர்ந்தவர்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று மற்றவர்களின் உதவி கிடைக்கும். இன்று மனிதன் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. உங்களின் பயணங்கள் லாபகரமாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்க்க முடியும். இன்று உங்களின் விளைவில் உள்ள வேலைகளை எளிதாக முடிக்க முடியும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி சேர்ந்த அரசியல் தொடர்புடையவர்களுக்குப் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று பெற்றோருக்கு சேவை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் புத்துணர்ச்சியான மனநிலை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில சிறு குழப்பங்கள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளை பேசி தீர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் செல்வீர்கள். குழந்தைகளின் செயல்பாடு மனநிகழ்ச்சியை அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

மீன ராசி பலன்கள்

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த சில வேலைகள் முடிக்க முடியும். மாணவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். மூதாதையர்களின் சொத்துக்கள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழல் இருக்கும். பழைய சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். இதனால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!