இன்று ஆகஸ்ட் 23, சனிக்கிழமை நாளில் சந்திரன் சிம்ம ராசியில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம் கூடிய தினத்தில், மகர ராசியின் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய கலாநிதி யோகத்தால் சொல், செயல்களால் வெற்றி அதிகரிக்கும்.
மேஷம் ராசி பலன்
இன்று நீங்கள் அதிக உற்சாகத்துடன் எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் உங்கள் பணத்தில் ஒரு பகுதியை சுப காரியங்களிலும் செலவிடுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் நல்லிணக்கத்தைப் பேணுங்கள், இல்லையெனில் பிரச்சனைகள் ஏற்படலாம். இன்று உங்கள் பணம் சில விஷயங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ள உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
இன்று உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாள், ஆனால் கடின உழைப்பால் நீங்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். மூதாதையர் சொத்து தொடர்பான தகராற்றில் வெற்றி கிடைக்கும் என்பதால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், மேலும் எந்தவொரு சமூக விஷயத்திலும் நீங்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மூத்தவர்களுடன் கருத்து வேறுபாட்டால் உறவில் விரிசல் அதிகரிக்கலாம் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. உங்கள் பழைய தவறுகளுக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கலாம்.
மிதுனம் ராசி பலன்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. ஆன்மிகம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும், இதன் காரணமாக உங்கள் நற்பெயர் எல்லா இடங்களிலும் பரவும். மேலும் ஒரு குடும்ப உறுப்பினரின் உடல்நலம் குறித்து நீங்கள் கவலைப்படுவீர்கள். பொது நலப் பணிகளில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக உங்களைத் தொந்தரவு செய்யும் உடல் ரீதியான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்துடன் எந்த முடிவு பிறரை ஆச்சரியப்படுத்தலாம்.
கடகம் ராசி பலன்
இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். ஏனென்றால் உங்கள் உணவுப் பழக்கம் உங்களுக்கு வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இன்று வெளிநபர்கள் வழங்கும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வதற்கு முன் மிக கவனமாக சிந்தித்து செயல்படவும். முடிந்தவரை ஆலோசனையை பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இன்று வேலையில் உங்கள் செயல்பாடுகள் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இல்லையெனில் அவர் உங்கள் நம்பிக்கையை உடைக்கலாம், இது உங்களுக்கு வருத்தத்தை அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
இன்று உங்கள் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும். உங்கள் காதல் வாழ்க்கையில் நிலவும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள், மேலும் நீங்கள் ஒருவரையொருவர் அன்பு, ஆதரவோடு கவனித்துக் கொள்வதைக் காணலாம். சில தனிப்பட்ட விஷயங்களில், நீங்கள் தீவிரத்தை கடைப்பிடித்து உறவில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறலாம். ஒரு புதிய வேலைக்கு முயல்பவர்களுக்கு உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்று அதன் மூலம் நீங்கள் பெரிய லாபத்தைப் பெறலாம்.
கன்னி ராசி பலன்
பணம் தொடர்பான விஷயங்களில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும், கடின உழைப்பால் இதுவரை உங்களுக்கு இல்லாத அனைத்தையும் நீங்கள் பெறலாம். பணியிடத்தில் எதிரிகள் பிரச்சனைகளை அதிகரிக்க முயல்வார்கள். சில முக்கியமான விவாதங்களில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பரிவர்த்தனை விஷயங்களில் நீங்கள் தெளிவாக செயல்படவும். யாரிடமிருந்தும் பணம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், அது பின்னாளில் பிரச்சனையை தர வாய்ப்புள்ளது.
துலாம் ராசிபலன்
துலாம் ராசிக்கு இன்று மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதும், அதன் மூலம் முன்னேற்றமும் உண்டாகும். மாணவர்கள் உயர் கல்விக்கான பாதை அமையும். இன்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்கள் வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் மனவருத்தம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். புதிய சொத்துக்கள் சேர வாய்ப்பு உண்டு. இன்று குடும்பத்தில் குழப்பம் தீரும். தனிப்பட்ட விஷயங்களில் முழு கவனம் செலுத்துவது நல்லது. புதிய வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியை தரும். பணியிடத்தில் உங்கள் வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். சக ஊழியர்களிடமிருந்து வேலையை முடிப்பதில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்கு இன்று நல்ல நாளாக அமையும். சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். உங்கள் தொழில் தொடர்பாக நல்ல செய்திகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். துணை உங்கள் மீது கோபப்பட வாய்ப்பு உண்டு. சமூக உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் சுறுசுறுப்பாக செயல்படவும். இன்று காலையிலிருந்து சரியான திட்டமிடிலும், சோம்பேறித்தனத்தை தவிர்த்து வேகமாக செயல்படுவது நல்லது. ஆபத்தான எந்த ஒரு வேலைகளிலும் ஈடுபட வேண்டாம்.
மகர ராசி பலன்
மகரம் ராசிக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். குழந்தைகளுக்கு சில நல்ல விஷயங்களை சொல்லித் தருவீர்கள். இன்று அவர்கள் மதிப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்யவும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் மீது நம்பகத்தன்மை மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவில் அன்பும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.
கும்ப ராசி பலன்
கும்பம் ராசியை சேர்ந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். உங்கள் வேலைகளை முடிப்பதில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் பேச்சில் இனிமையும் மரியாதையும் கடைப்பிடிப்பது அவசியம். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசிக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதனால் மனக்கவலை ஏற்படலாம். இன்று எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வேலைகளில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் கடினமாக உழைப்பு தேவைப்படும். இன்று உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.