Home » இரண்டு மாதமாக பணப் பையை பாதுகாப்பாக வைத்திருந்து உரிமையாளரிடம் ஒப்படைக்க சராதி

இரண்டு மாதமாக பணப் பையை பாதுகாப்பாக வைத்திருந்து உரிமையாளரிடம் ஒப்படைக்க சராதி

by newsteam
0 comments
இரண்டு மாதமாக பணப் பையை பாதுகாப்பாக வைத்திருந்து உரிமையாளரிடம் ஒப்படைக்க சராதி

42,100 ரூபாய் பணத்தோடு தவறவிட்ட பணப்பையை பாதுகாப்பாக வைத்திருந்து இரண்டு மாதங்களின் பின்னர் பாதுகாப்பாக பணத்தொகையுடன் பயணியிடம் ஹட்டன்- கொழும்பு தனியார் பஸ் சாரதி கையளித்துள்ளார்.சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹட்டன் வந்த பயணியொருவர் பொதியொன்றை தவற விட்டு சென்றுள்ளார்.தேடி வருவார் என பாதுகாப்பாக பொதியை வைத்திருந்த பஸ் சாரதி பொதியை, பிரித்து பார்த்தபோது அதில் ஒருத்தொகை பணமும் மருத்துவ சிகிச்சைக்கான அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதை கண்டு உடனடியாக ஹட்டன் பஸ் தரிப்பிட நிலைய அதிகாரிகளிடம் உரியவரை தேடி ஒப்படைக்குமாறு பொதியை கையளித்துள்ளார்.
அதன் பின்னர் அதிகாரிகள் பொதியின் உரிமையாளரை தேடி வரவழைத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் முன்னிலையில் 42100 ரூபாய் பணத்தையும் ஆவணங்களையும் நேற்று (26) கையளித்துள்ளனர்.ஹட்டன்- கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸின் உரிமையாளரும் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை பலரும் பாராட்டியுள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!