Home » இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை

இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை

by newsteam
0 comments
இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை

இலங்கையில், ஜூலை முதலாம் திகதி முதல் பிள்ளைகள் யாசகம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதற்கு மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் வீட்டு வேலைகள் உட்பட ஈடுபடுத்தல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டமைக்கு இணங்க தற்போது காணப்படும் சட்ட ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி இது தொடர்பான சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுதல் தொடர்பாக சரளமாக தெளிவுப்படுத்தும் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!