இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) பெண் ஊழியர்கள் உட்பட 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் இதற்கான நேர்காணல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பெண்களை பணியமர்த்துவதற்கு முன்பு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.இந்தநிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பேருந்துகளில் பெண் ஊழியர்களை பணியமர்த்துவதே ஆரம்ப திட்டம் என்றும், இது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.