Wednesday, March 26, 2025
Homeஇலங்கைஅம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குழந்தை

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த கைக்குழந்தை

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் மாதம்பாகம தேவகொடவில் உள்ள “மல் அல்லிய” என்ற இடத்திற்கு அருகில் உள்ள வீட்டின் மதில் சுவருக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையொன்று மீட்கப்பட்டு பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சில மாதங்களேயான ஆண் குழந்தையை தாய் ஒருவர் இவ்வாறு கைவிட்டு சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இன்று (10) காலை 8.25 மணியளவில், பெண்ணொருவர் அந்த சுவரின் அருகே ஏதோ அசைவதைக் கவனித்தார். அதனை பார்க்கச் சென்ற போது அங்கு குழந்தையொன்று கிடப்பதை கண்டு பிரதேசவாசிகளுக்கு அறிவித்துள்ளார்.பின்னர் அம்பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வீதியில் கைவிடப்பட்ட குழந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் குழந்தை பொலிஸ் நடமாடும் வாகனத்தின் ஊடாக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை சாதாரண நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை வீதியில் கைவிட்டுச் சென்ற தாயைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான தாய் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அம்பலாங்கொடை பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். அம்பலங்கொடை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பொலிஸாரால் தேடப்படும் செவ்வந்தியின் பாட்டி வெளியிட்ட தகவல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!