Home » அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்

by newsteam
0 comments
அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு இன்று (27) வருகைதந்தார்.காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் ஜும்ஆ பேருரை, தொழுகையினையும் நடத்தியதுடன் பல குரல்களில் அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையினை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் இஷா தொழுகையினை வாழைச்சேனை முகைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் நடத்திவைத்தார்.அஷ்ஷேய்க் முகம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷ் அவர்களது குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!