தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் பிரச்சினை நாளைய தினத்துக்குள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், தங்களது பேருந்துகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் தேவையான அளவுக்கு அதிக எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். இந்தநிலையில் இலங்கை கனியவள விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையே இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை மறுதினம் காலை 9 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்
By newsteam
0
165
RELATED ARTICLES