Home » எலிக்காய்ச்சலினால் யாழில் மேலும் இரு மரணங்கள் பதிவு

எலிக்காய்ச்சலினால் யாழில் மேலும் இரு மரணங்கள் பதிவு

by newsteam
0 comments
எலிக்காய்ச்சலினால் யாழில் மேலும் இரு மரணங்கள் பதிவு

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேநேரம், தற்போது வைத்தியசாலைகளில் எலிக்காய்ச்சலுக்காக 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!