Home » காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

by newsteam
0 comments
காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

நேற்றையதினம் அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்றையதினம் காணாமல் போயுள்ளார். இது குறித்து அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்றையதினம், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!