Home » சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை

by newsteam
0 comments
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை

சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், மது வரி திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.2024 ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்ககளத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்படப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வருமான இலக்கு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பெற்றுக் கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோதமான மதுபானங்கள் தற்போது மதுபானசாலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.அவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற மதுபானங்களை கொள்வனவு செய்ய வேண்டாம்.அவற்றில் நஞ்சு தன்மை காணப்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு புதிய வகையான மதுபானம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!