அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிஜ்ரா 3ம் வீதி பகுதியில் வீட்டினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் நேற்று (11)ம் திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த முறைப்பாடுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, நெசவாலை வீதி, சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, நேற்றைய தினம் (11) ம் திகதி இரவு வேளையில் ஹிஜ்ரா 3ம் வீதி பகுதியில் வீட்டினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப் பொருள் 3 கிராம் 20 மில்லிகிராம் மற்றும் கொள்ளையடித்த 2 பவுண் நகையையும் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர் எ.ம். நிரஞ்சன், ஜிஹான் உள்ளிட்ட அதிகாரிகள் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.