Home » சாவகச்சேரியில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு – தாய் கைது

சாவகச்சேரியில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு – தாய் கைது

by newsteam
0 comments
சாவகச்சேரியில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு -

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி தென்கிழக்கு, J/292 கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை குறித்த தோட்டத்தில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் கிணற்றில் நீர் எடுக்க முற்பட்ட வேளை சிசுவின் சடலத்தை பார்த்ததும் கிராம சேவகர் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த சிசு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவிடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.இதே வேளை சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டலில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சிசுவை பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43 வயதான, 3பிள்ளைகளின் தாயான பெண் கிளிநொச்சி பகுதிக்கு தப்பிச்செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைக்கு உதவி செய்திருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode