Wednesday, January 22, 2025
Homeஇலங்கைநேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மாதாந்த எரிபொருள் விலை

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மாதாந்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய்யின் விலையை மாத்திரம் குறைத்துள்ளது.அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 188 ரூபாவிலிருந்து 183 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டென் 92 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 309 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையை 286 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலையை 313 ரூபாவாகவும் தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா IOC மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் தங்களது எரிபொருட்களின் விலையை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளன.

இதையும் படியுங்கள்:  இரத்த உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!