பெல்மதுளை பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை, மதுபானம் பருகச் செய்த குற்றச்சாட்டில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுபானத்தை அருந்திய குறித்த மாணவி கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பெல்மதுளை நகரில் மகிழுந்து ஒன்றில் வந்து இறங்கிய 19 வயது மாணவி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை குழுவொன்று விசாரித்துள்ளது.இதன்போது அவர் மதுபானம் அருந்தியிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.இந்தநிலையில், மகிழுந்துக்குள் இருந்த மற்றைய நபரும் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அந்த நபர் மாணவியின் மேலதிக வகுப்பு ஆசிரியர் எனத் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, அந்த நபரை அங்கிருந்த குழுவினர் தாக்கியுள்ளதுடன், அவரை பெல்மதுளை காவல்நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.