Home » போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இருவர் கைது

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இருவர் கைது

by newsteam
0 comments
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இருவர் கைது

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேட அதிரடிப்படையினர் இன்று (05) கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த தனியார் பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வழிமறித்த பொலிஸார் அதில் சோதனையை முன்னெடுத்தனர்.இதன்போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது.அதனை உடமையில் வைத்திருந்த தென் பகுதிகளை சேர்ந்த இரண்டு நபர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode