Home » மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்

by newsteam
0 comments
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்

கடமை நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான கேகாலை தலைமையக காவல் நிலையத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கலிகமுவ, கொப்பேவல பகுதியில் ஏற்பட்ட குறித்த வாகன விபத்து தொடர்பாக கேகாலை தலைமையக காவல்நிலையத்தைச் சேர்ந்த உப காவல்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

அவர் அலுவலக பணியாக அம்பேபுஸ்ஸ பகுதிக்கு காவல்துறை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்த் திசையிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தின் பின்னர் குறித்த காவல்துறை வாகனம் நிறுத்தாமல் சென்றிருந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்தவர்கள் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.இந்த நிலையில், தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர் மதுபோதையிலிருந்ததாக தெரிய வந்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode