Home » மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல்

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல்

by newsteam
0 comments
மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல்

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (27) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்கு பின் பகுதியில் திடீரென தீ பரவல் ஏற்பட்ட நிலையில் இதனை அவதானித்த மக்கள் விரைவாக செய்யப்பட்டதன் அடிப்படையில் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கு பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.எனினும் வீட்டில் காணப்பட்ட உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியதுடன் மக்கள் ஒண்றினைத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் பெரும் தீ விபத்தானது தவிர்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode