Home » முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவைத் தேட 6 பொலிஸ் குழுக்கள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவைத் தேட 6 பொலிஸ் குழுக்கள்

by newsteam
0 comments
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்துவைத் தேட 6 பொலிஸ் குழுக்கள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.அது தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.கடந்த 2023 டிசம்பர் 31ம் திகதியன்று மாத்தறை பெலேனா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புபட்ட சம்பவத்திலாகும்.இதையடுத்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!