பருத்தித்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முல்லைதிவ்யன் தலைமையிலான சுயேட்சைக்குழு இன்று செலுத்தியது.யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் இன்று காலை அவர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளை இனியும் நம்புவதை விடுத்து பிரதேசங்களில் பற்றுக் கொண்டு சுயேட்சையாக களமிறங்கும் தம்மை போன்ற இளைஞர்களை ஆதரிக்க வேண்டுமென தெரிவித்தார்