கம்பளை – கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் கம்பளை, கிராஉல்ல பகுதியைச் சேர்ந்த மதுர கீர்த்தி குணசேகர (58 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் நேற்று (22) காலை கெலிஒயா பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.கொழும்பு தொல்கொட பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வந்த இந்த கார், வீதியை விட்டு விலகி, சைக்கிள் மீது மோதி அருகில் இருந்த வியாபார நிலைய கட்டிடத்தின் மீதும் மோதியது. உயிரிழந்தவரின் சடலம் பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டர் சைக்கிள் மீது கார் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
By newsteam
0
240
Previous article
Next article
RELATED ARTICLES