யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம்ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 26.01.2025 அன்று ஜந்தாம் நாள் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.இங்கு விஷேட அபிஷேக ஆராதனை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி, வெளிவீதியூடாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனை தொடர்ந்து ஒரு மாம்பழம் 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஜெயசந்திரன் குடும்பத்தினரே இவ் மாம்பழத்தினை பெற்றனர்.