யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்போது விடத்தல்பளை, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த நடராசலிங்கம் புஸ்பராணி (வயது 67) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த பெண் கடந்த 08 – 11ஆம் திகதி வரை காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 11ஆம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த நிலையில் உயிரிழப்பு
By newsteam
0
248
RELATED ARTICLES