அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) காலை 08:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்து வருகிறது.யாழ்ப்பாணத்திலும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர வைத்திய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சேவையினை பெறவந்த நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.