பொது நிர்வாக உள்நாட்டுவலுவல் அமைச்சின் ஒழுங்கமைப்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட செயலங்களிலும் 77வது சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.அந்தவகையில் இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் “தேசிய மறு மலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்னும் கருப்பொருளில் சிறப்பாக இடம்பெற்றது.யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அணிவகுப்பு மரியாதை முன்னே செல்ல, மாவட்ட செயலாளர், பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவ, பொஸில், கடற்படை, விமான படை அதிகாரிகள், பொதுமக்கள் மாவட்ட செயலக முன்றலுக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் 08.10 மணியளவில் தேசியக் கொடியினை யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசியகீதம் பாடப்பட்டு, பின்னர் மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி அவர்களால் ஆற்றிய சுதந்திரதின செய்தி காணொளி மூலமாக ஒளிபரப்பப்பட்டது.பின்னர் சர்வமத ஆசியினை தொடர்ந்து ஜனாதிபதியின் சுதந்திரதின வாழ்த்து செய்தியினையும், யாழ். மாவட்ட முன்னேற்ற வாழ்த்துச் செய்தியினையும் யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வாசித்தார்.
இதில் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் (காணி) செ.ஸ்ரீமோகனன், யாழ். மாவட்ட பிரதி பொஸில் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட முப்படைகளின் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சாரண மாணவர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்