Home » ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை

ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை

by newsteam
0 comments
ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இது தொடர்பில் ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில்,இந்த ரயில் சுற்றுலாவுக்காக தனியார் நிறுவனம் ஒன்றினாால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களை கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது குறித்து திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
வழக்கமாக சேவையில் ஈடுப்படும் பயணிகள் ரயிலில் இந்த சம்பவம் நடைபெறவில்லை. விசாரணை நடந்து வருகிறது, மேலும் சுற்றுலாப் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளோம். ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் பொறுப்பானவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!