Home » வீட்டில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வீட்டில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

by newsteam
0 comments
வீட்டில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

அம்பாந்தோட்டை,விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஒகேவெல பொலிஸார் தெரிவித்தனர்.ஒகேவெல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விதாரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.கதுருவெல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய இவர் 1994 ஆம் ஆண்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒகேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!