Home » ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

by newsteam
0 comments
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது சுதந்திர தின வாழ்த்துச்செய்தி

அனைத்து இன மக்களதும் உயிர் தியாகங்களால் உயிர்பெற்ற எமது தாய் நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்சிச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனது சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. சமாதானம், சகோதரத்துவம், சந்தோசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த சிறப்புமிக்க சுதந்திரத்தை நமது நாடும், நாட்டு மக்களும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதோடு இனவாதமற்ற அனைத்தின மக்களும் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் நமது நாடு தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார ரீதியிலான பல்வேறு நெருக்கடுகளை எதிர்நோக்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் வளமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க இந்த நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக்கொள்வோம்.

My Image Description

இந்த தேசிய சுதந்திர தினத்தில், எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தம் உயிர்களை தியாகம் செய்த அனைவரையும் நாம் மரியாதையுடன் நினைவு கூர்வதோடு, அனைத்து சவால்களையும் முறியடித்து நாளைய விடியலுக்காக வளமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!