Site icon Taminews|Lankanews|Breackingnews

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலின் விளைவாக எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலின் விளைவாக எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்

எரிபொருள் விலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக, உயர் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலின் விளைவாக, சர்வதேச சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் பாரிய அளவிலான எரிபொருள் உற்பத்தியாளராகச் செயற்படும் நிலையில், உலகளாவிய விநியோகத்தில் சுமார் 3 சதவீதத்தைக் கொண்டுள்ளது.இந்தநிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.42 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.

எனினும், ஜூன் மாத இறுதியில் எரிபொருள் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் இது பிரச்சினையாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் கட்டளைகளுக்கமைய, முந்தைய விலையிலேயே தற்போது எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகிறது.
எனவே, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கொள்முதல் கட்டளைகளுக்கு மாத்திரமே விலை அதிகரிப்பு சாத்தியமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Exit mobile version