Home » ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு – சீனாவில் வினோதம்

ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு – சீனாவில் வினோதம்

by newsteam
0 comments
ஒரே உடலில் 2 இனப்பெருக்க அமைப்பு - சீனாவில் வினோதம்

சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்புகளை கொண்ட அவர் அரசு ஆவணங்களின்படி பெண் எனவே அறியப்படுகிறார்.
தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண் லியு , 18 வயதில் டாங் என்ற நபரை மணந்தார். ஒரு வருடத்திற்கு பின் லியு ஆண் குழந்தையை பிரசவித்தார்.இருப்பினும், லியுவின் உடல் விரைவில் விவரிக்க முடியாத மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் திடீர் எழுச்சி தாடியின் வளர்ச்சிக்கும், மார்பக அளவு குறைவதற்கும், ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.விவாகரத்துக்குப் பிறகு, லியு தனது மகனை தனது தந்தையுடன் விட்டுவிட்டு புதிதாகத் ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். வேறொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த லியு , அங்கு ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஆணாக வாழ ஆரம்பித்தார்.

இந்தச் சமயத்தில்தான் லியு, ஜோ [zhou] என்ற பெண் சக ஊழியரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில், லியு தனது தனிப்பட்ட உடல் நிலை காரணமாக ஜோவை காதலிக்க தயங்கினார். இருப்பினும், ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.லியுவின் நிலைமையால் சவால்கள் இருந்தபோதிலும், ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், லியுவின் அடையாள அட்டையில் அவர் பெண் என அடையாளப்படுத்தியதால் அவர்கள் திருமணம் தடைப்பட்டது. சீனாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாததால், சட்டப்படி இருவரும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கி -இடம் சென்றார். டாங் ஜோவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் லியு வாழ்வார் என்ற முடிவு எட்டப்பட்டது.இதன் விளைவாக, டாங் மற்றும் ஜோ அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் லியுவும் ஜோவும் தொடர்ந்து ஜோடியாக வாழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லியு மூலம் ஜோ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது 59 வயதான லியு தாயாகவும், தந்தையாகவும் ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லியுவின் கதை சீன ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!