Home » பாகிஸ்தானில் ரயிலை கடத்திய ஆயுதக்குழு : 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் ரயிலை கடத்திய ஆயுதக்குழு : 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

by newsteam
0 comments
பாகிஸ்தானில் ரயிலை கடத்திய ஆயுதக்குழு : 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பயணிகள் தொடருந்தை பயங்கரவாதிகள் நேற்று (11) சிறைபிடித்தனர்.அதில் பயணம் செய்த 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.500 ற்கும் மேற்பட்ட பயணிகள், பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டனர்.உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள 104 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.ஏனைய பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அனைத்து பணயக் கைதிகளும் பாதுகாப்பாக மீட்க்கப்படுவார்கள் என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!