Home » யுக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய உறுதி

யுக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய உறுதி

by newsteam
0 comments
யுக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய உறுதி

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.யுக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகப் பிரித்தானிய பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் யுக்ரைனுக்கான இராணுவ உதவிகளை வழங்கும் 2.6 பில்லியன் பவுண்ட்ஸ் கடன் உடன்படிக்கையில் இருவரும் கைச்சாத்திட்டுள்ளனர்.ரஷ்யாவின் சொத்துக்களை முடக்கிய மையின் ஊடாக கிடைக்கப் பெற்ற நிதியிலிருந்து பிரித்தானியா இந்த கடனை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் பிரித்தானிய பிரதமரின் தலைமையில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.இதில் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி கலந்துகொள்ளவுள்ளதுடன் பின்னர் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரையும் அவர் சந்திக்கவுள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!