Thursday, September 18, 2025
Homeஉலகம்ரஷியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

ரஷியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் – ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை அந்நாடுகளில் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது
ரஷியா , வட கொரியா உட்பட 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அமெரிக்காவின் இந்த பட்டியலில் ரஷியா , வட கொரியா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுஜ்கள் இடம் பெற்றுள்ளன.

மேற்க்கண்ட நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.உக்ரைன் – ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கல் இருக்கிறது. பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. வட கொரியாவில் வெளிநாட்டினர் மீது கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளம் வர்த்தகர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!