Monday, May 19, 2025
Homeவிளையாட்டு செய்திஐபிஎல் தொடரின் PLAYOFF சுற்றுக்கு 3 அணிகள் தகுதி

ஐபிஎல் தொடரின் PLAYOFF சுற்றுக்கு 3 அணிகள் தகுதி

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 60 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டெல்லியில் நடைபெற்ற குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.துடுப்பாட்டத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் சார்பில் கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.இந்தநிலையில் 200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பில் சாய் சுதர்சன் 108 ஓட்டங்களையும், சுப்மன் கில் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இதற்கமைய இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் PLAYOFF சுற்றுக்குக் குஜராத் டைட்டன்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!